கடலூரில் வாடகை வீட்டில் விபசாரம்; 2 அழகிகள் சிக்கினர்

வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை

Update: 2021-10-19 14:49 GMT
கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஏ.டி.ஆர். தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) யாஸ்மின், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் ஏ.டி.ஆர். தோட்டம் பகுதியில் தகவல் கிடைக்க பெற்ற வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 2 அழகிகள் மூலம் விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட பண்ருட்டியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணையும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 27 வயதான பெண்ணையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட காஞ்சீபுரம் மாவட்டம் வயலூரை சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்