தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முள்ளக்காடு சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் ராஜகனி மகன் மாரிவேல் (வயது 35). லாரி டிரைவர்.
அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் பிரதீப். இவர் மோட்டார் சைக்கிளில் சவேரியார்புரம் மேற்குப்பகுதியில் வேகமாக சென்றாராம். இதனை மாரிவேல் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், மாரிவேலின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர் நேற்று முன்தினம் தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.