மிலாது நபி ஊர்வலம்

மிலாது நபி ஊர்வலம்

Update: 2021-10-19 12:21 GMT
திருப்பூர்
இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபி நாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தநிலையில் திருப்பூர் காங்கேயம் ரோடு காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள ஹிஸ்னும் இஸ்லாம் சுன்னத் வல் ஜாமாத் சார்பில் நபி புகழ் பாடும் குழந்தைகளின் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஜமாத்தின் பள்ளிவாசலின் தலைமை இமாம் அப்துல்லா பாக்கவி பிரார்த்தனை செய்து, பள்ளிவாசலின் தலைவர் சலீம் தொடங்கி வைத்தார்.
இதில் சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும். அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள், மதராசாவின் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்