அரசு மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் செயல் விளக்க பயிற்சி
மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.
கடமலைக்குண்டு:
மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதற்கு நிலைய அலுவலர் பழனி தலைமை தாங்கினார். இதில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மின் விபத்து உள்ளிட்ட அபாயங்களிலிருந்து மாணவர்கள் எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது தொடர்பாக தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.
மேலும் நீர்வரத்து அதிகமாக உள்ள நேரங்களில் ஆறு, ஓடைகளை கடக்க கூடாது, இடி, மின்னலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக மழை பெய்யும் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுபோல தீபாவளியின் போது பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்கும் முறைகள் பற்றி விளக்கப்பட்டது.