கல்லூரியில் சேர வந்த மாணவரிடம் செல்போன் திருட்டு
சென்னையில் உள்ள கல்லூரியில் சேர வந்த மாணவரிடம் கோயம்பேட்டில் செல்போனை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.;
பூந்தமல்லி,
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 23). இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எட். பட்டப்படிப்பில் சேர்வதற்காக சொந்த ஊரில் இருந்து பஸ்சில் நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கினார். பின்னர் கோயம்பேட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல பஸ்சில் ஏறும்போது முதுகில் மாட்டி இருந்த பையில் வைத்திருந்த செல்போனை மர்மநபர் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.