பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

நாங்குநேரி அருகே பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்று விட்டனர்.;

Update: 2021-10-18 21:14 GMT
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் அரங்கநாதன் (வயது 43), லாரி டிரைவர். இவருடைய மனைவி அனுஷபதி (42). இவர் நேற்று அதிகாலை வீட்டுவாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அனுஷபதி அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்