விபத்தில் கொத்தனார் சாவு

மானூரில் ஆட்டோ- மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-10-18 21:05 GMT
மானூர்:
மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 27). கொத்தனார். இவர் எட்டான்குளத்தில் இருந்து மானூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மானூருக்கு மேல்புறம் உள்ள திருப்பத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த ஆட்டோவும், அவரது மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் தூக்கி எறியப்பட்ட பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சென்று, பிரவீன் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக களக்குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவநீதன் (30) என்பவர் மீது மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிரவீனுக்கு இவாஞ்சலின் என்ற மனைவியும், எமர்வீன், ராபின் என்ற 2 மகன்களும் உள்ளனர்.


மேலும் செய்திகள்