பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி
பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி தோன்றியுள்ளது.
அந்தியூர்
அந்தியூைர அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 20 நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் ஆங்காங்கே திடீர் அருவி தோன்றி உள்ளது. இந்த அருவி ரோடுகளில் விழுந்து சீறிப்பாய்ந்து செல்கிறது. குறிப்பாக அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதி செல்லும் மலைப்பாதையில் செட்டிநொடி என்கின்ற இடத்தில் திடீர் அருவி ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து ரோட்டில் கொட்டுகிறது. இதை அந்த மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்து சென்றனர். ஒரு சிலர் அருவியையும், அருவியின் முன் நின்றும் செல்பி எடுத்தனர்.