சேலத்தில் லாரி மீது வேன் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம்

சேலத்தில் லாரி மீது வேன் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2021-10-18 20:30 GMT
கருப்பூர்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி (வயது 56). விவசாயி. இவரது தந்தை வேட்ராயன் (74) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவருக்கு திதி கொடுப்பதற்காக அம்மாசியின் குடும்பத்தை சேர்ந்த 18 பேர் ஒரு டிராவல்ஸ் வேனில் ராமேசுவரத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று இரவு ஊருக்கு திரும்பினர். வேனை பாப்பாரப்பட்டியை சேர்ந்த சிவா (26) என்பவர் ஓட்டினார். சேலத்தை அடுத்த டால்மியா போர்டு பகுதியில் இரவு 11 மணியளவில் வேன் சென்றபோது, பழுதாகி நின்ற லாரியின் பின்பக்கமாக மோதியது. இந்த விபத்தில் வேன் முன்பக்கம் நொறுங்கியது. வேனில் இருந்த அம்மாசி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த அருள் பாண்டியன் (31), பிரபு (32) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்