தம்பியை கத்தியால் கிழித்த அண்ணன் கைது

தம்பியை கத்தியால் கிழித்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-18 20:16 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி 2-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 38). கொத்தனார். நேற்று முன்தினம் களரம்பட்டி மதுரைவீரன் கோவிலில் கிடா வெட்டு பூஜை நடந்தது. இதற்காக சஞ்சீவியின் வீட்டிற்கு அவரது உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது இரவில் சஞ்சீவியின் அண்ணன் பங்காருசாமியின் (41) மைத்துனனான கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, ஆசனூரை சேர்ந்த பெருமாள் மகன் முத்தையா (27) குடிபோதையில் வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட சஞ்சீவி, முத்தையாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பங்காருசாமி நேற்று காலை வீட்டில் இருந்த சஞ்சீவியை தகாத வார்த்தையால் திட்டி, கத்தியால் கழுத்தில் கிழித்துவிட்டு சென்றார். இதில் படுகாயமடைந்த சஞ்சீவி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சஞ்சீவி கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பங்காருசாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்