சாலையில் குப்பைகள் கொட்டியதை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியல்

ஆரணி-வந்தவாசி சாலையோரம் குப்ைபகள் கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-18 18:09 GMT
ஆரணி

ஆரணி-வந்தவாசி சாலையோரம் குப்ைபகள் கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டு கொள்ளாத நகராட்சி

ஆரணியில் 1-வது வார்டு முதல் 18-வது வார்டு வரை தனியார் சார்பாக துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. நகரில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வந்து ஆரணி-வந்தவாசி சாலையோரம் உள்ள குப்பைக் கிடங்கில் சேர்ப்பதாக கூறி விட்டு, ஆங்காங்கே சாலையோரமும், நகராட்சி எல்லைப் பகுதியிலும் கொட்டுகிறார்கள். இதனால் சாலையோரம் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அவலம் இருந்து வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் சரிவர கண்டு கொள்ளவில்லை, எனக் கூறப்படுகிறது. 

திடீர் மறியல் 

அதேபோல் ேநற்று வழக்கமாக துப்புரவு பணியாளர்கள் சேகரித்து வந்த குப்பைகளை ஆரணி-வந்தவாசி சாலையோரம் கொட்டி உள்ளனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மில்லர்ஸ் ரோடு அருகில் துப்புரவு பணியாளர்கள் கொட்டிய குப்ைபகளை அள்ளி சாலையில் போட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சாலையோரம் 
குப்ைபகளை கொட்டும் துப்புரவு பணியாளர்களுக்கும், கண்டு கொள்ளாத அதிகாரிகளுக்கும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தருமன், ரகு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். 
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜ விஜய காமராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், தனியார் துப்புரவு பணி மேலாளருக்கு தகவல் தெரிவித்து, மில்லர்ஸ் ரோடு அருகில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை உடனடியாக அகற்றும் படி உத்தரவிட்டார். சாலை மறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்