குழந்தை திருமண தடைச்சட்டத்தில் 3 பேர் கைது

குழந்தை திருமண தடைச்சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-18 17:28 GMT
காரைக்குடி, 
காரைக்குடியில் 18 வயது வாலிபருக்கும் 17 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வாலிபர் திருமண ஆசை காட்டி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். இதை அறிந்த அவர்களது பெற்றோர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் மாணவிக்கு கர்ப்பத்தை கலைத்து விட முடிவு செய்து அவர்கள் 2 பேரும் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வயதை கூட்டி தவறான தகவல்களை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளனர். அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  மாணவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் அந்த வாலிபர் மீண்டும் மாணவியுடன் தொடர்பு கொள்ள அவர் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து அந்த மாணவி கர்ப்பத்தை கலைக்க  காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மாணவியின் நிலையை அறிந்த மருத்துவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்ய பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வாலிபர், மாணவியின் தாய் மற்றும் வாலிபரின் பெற்றோர் ஆகிய 4 பேர்மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்