முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை சாவு
காவேரிப்பட்டணத்தில் முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்தது.;
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கோவிந்த செட்டி தெருவை சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவருடைய மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதிக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. குழந்தை எஸ்.எம்.ஏ., (டைப் 1) எனப்படும் முதுகு தண்டுவட பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டது. மருத்துவ செலவுக்கு 16 கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், இதுகுறித்த செய்தி வெளியானவுடன் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி வந்தனர். இந்த நிலையில் குழந்தைக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவனையில் குழந்தையை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை குழந்தை உயிரிழந்தது.