பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
பெண்ணிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
கீழக்கரை,
கீழக்கரை அருகே உள்ள மு.மோர்குளத்தை சேர்ந்தவர் ஆயிஷா. இவர் ஊருக்கு அருகாமையில் உள்ள குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது சின்ன ஏர்வாடியை சேர்ந்த பஞ்சவர்ணம் (வயது32) என்பவர் குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் சங்கிலியை பறித்து சென்று உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி 1 மணி நேரத்தில் பஞ்சவர்ணத்தை கைது செய்து 5 பவுன் தங்க சங்கிலியை மீட்டு ஒப்படைத்தனர்.