கிணத்துக்கடவு அருகே சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

கிணத்துக்கடவு அருகே சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி;

Update: 2021-10-18 17:09 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி ஊராட்சியில் இருந்து கருப்பராயன் கோவில் தரைப்பாலம் வழியாக  பட்டணத்திற்கு செல்ல தார்சாலை உள்ளது. இந்த சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

முள்ளுப்பாடி-பட்டணம் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை விரைவில் புறவழிசாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, சாலையில் தண்ணீர் தேங்கி, குழிகள் தெரியாத நிலையில் உள்ளது. 

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்