மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

Update: 2021-10-18 13:16 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில் பகுதிகளில்  கிரசர் மண். கிராவல் மண், கற்கள் கடத்துவதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி பொறுப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், குமார் மற்றும் போலீசார்,  கிராம நிர்வாக அலுவலர் கவிதா ஆகியோர் வெள்ளகோவில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்உரிய அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். 
அந்த லாரிகளை ஓட்டி வந்த ஓலப்பாளையம், ராம்நகர் பகுதியை சேர்ந்த  கே.வீரன் வயது  கோபாலகிருஷ்ணன் , வெள்ளகோவில் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த சரவணகுமார்ஆகிய  3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகளின் உரிமையாளர்கள் இலக்கமநாயகன் பட்டி அருகே உள்ள ஊஞ்சவலசை சேர்ந்த  சேகர்,  வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு் சுக்லா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள். லாரியின் உரிமையாளர்களை  போலீசார்  தேடி வருகின்றனர்.

---

மேலும் செய்திகள்