பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படை வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை

பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படை வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-10-18 11:08 GMT
பேரையூர், 
பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படை வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்திரப்பதிவு
 பேரையூரில் உள்ள வத்திராயிருப்பு சாலையில் பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளது. பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டி 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு பேரையூர், டி. கல்லுப்பட்டி, சாப்டூர், அத்திபட்டி, குன்னத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய வருகை தருகின்றனர். 
தற்போது இங்கு வருகைதரும் பொதுமக்களுக்கு என்று சுகாதார வசதி எதுவும் இல்லை. ஏற்கனவே இருந்த கழிப்பறை வசதி அறை பயனில்லாமல் பூட்டப்பட்டு உள்ளது. பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்கள் சுகாதார வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். 
பத்திரப்பதிவுக்காக காலையில் இருந்து மாலை வரையில் பத்திர அலுவலகத்தில் காத்திருப்பதால், அங்கு சுகாதார வசதி இல்லாமல் வேதனைப்படுகின்றனர். பெரும்பாலும் பத்திரப்பதிவு செய்ய வருகை தருவோர் வெளியூரை சேர்ந்தவர்களாக இருப்பதால் சுகாதார வசதிக்காக அலைகின்றனர். 
மேலும் பத்திரப்பதிவுக்காக தினசரி 100 முதல் 150 பேர் வருவதால் அவர்கள் நிற்பதற்கு இடம் இல்லாத நிலை உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெளியே வெயிலிலும் மழையிலும் நிற்கக்கூடிய அவலம் உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு எடுத்துக்கூறியும், சுகாதார வளாக வசதிகள் மற்றும் பத்திரப் பதிவுக்கு வருவோர் உட்காருவதற்காக நிழல் குடை அமைத்துக்கொடுக்கப்பட வில்லை.
கோரிக்கை 
எனவே  இனிமேலாவது பேரையூர் பத்திர அலுவலகத்துக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என்று இந்தபகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்