திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலியானார்.

Update: 2021-10-18 00:12 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தயாளம் (வயது 60). இந்நிலையில் கடந்த 13-ந்தேதி அன்று இரவு தயாளம் தன் வீட்டின் அருகே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் தன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவர் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமி யார் என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்