பணம் வைத்து சூதாட்டம்; 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-18 00:10 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த தண்ணீர் குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 38), தண்ணீர்குளத்தை சேர்ந்த மூர்த்தி (40), திருவள்ளூரை அடுத்த நடுகுத்தகை நாச்சியார் சத்திரம் பகுதியை சேர்ந்த வீரமணி (32) உள்ளிட்ட 7 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.

அவர்களை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர். இதில் மேற்கண்ட 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்தையும், 7 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்