சங்ககிரி அருகே லாரி பட்டறை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

சங்ககிரி அருகே லாரி பட்டறை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன.

Update: 2021-10-17 21:55 GMT
சங்ககிரி:
சங்ககிரி அருகே லாரி பட்டறை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன.
லாரி பட்டறை உரிமையாளர்
சங்ககிரி அருகே உள்ள கூழைகவுண்டனூர் பள்ளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 33). இவர் சங்ககிரியில் லாரி பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கோகிலா. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் பாலாஜி, மனைவியுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார்.
பின்னர் நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
10 பவுன் நகைகள் திருட்டு
மேலும் பீரோவில் இருந்த ஆரம், சங்கிலி, பிரேஸ்லெட் உள்பட 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து பாலாஜி சங்ககிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, லாரி உரிமையாளர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்