சேலம் மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-10-17 21:23 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 55 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று சற்று உயர்ந்து புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 12 பேர், ஓமலூரில் 6 பேர், எடப்பாடி, வாழப்பாடியில் 4 பேர், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் தலைவாசல் பகுதியில் தலா 3 பேர், வீரபாண்டியில் 2 பேர், கொளத்தூர், காடையாம்பட்டி, நங்கவள்ளி, சங்ககிரி, தாரமங்கலம், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர் நகராட்சி, மேட்டூர் நகராட்சியில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதேபோல், சேலம் மாவட்டத்திற்கு ஈரோட்டில் இருந்து வந்த 4 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 3 பேர் மற்றும் தர்மபுரி, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 99 ஆயிரத்து 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 59 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 560 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்