மூதாட்டி தற்கொலை

கடையம் அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-17 20:40 GMT
கடையம்:
கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த ராமர் மனைவி மூக்கம்மாள் (வயது 61). ராமர் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த மூக்கம்மாள் நேற்று காலை தனது உடலில் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மூக்கம்மாள் இதற்கு முன் 2 முறை தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்