தாளவாடி அருகே வாகனம் மோதி சிறுத்தை பலி
தாளவாடி அருகே வாகனம் மோதி சிறுத்தை பலியானது.
தாளவாடி
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலையில் சிக்கள்ளி அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தையை பார்வையிட்டனர். மேலும் கால்நடை டாக்டர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் இறந்த சிறுத்தையின் உடல் அந்த பகுதியில் எரியூட்டப்பட்டது.