தாயை தாக்கிய மகன் கைது

தேவர்குளம் அருகே தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-17 20:34 GMT
பனவடலிசத்திரம்:
தேவர்குளம் அருகே உள்ள சொக்கநாச்சியார்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 65), விவசாயி. இவருக்கு செல்லத்துரை (37) மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
இந்தநிலையில் செல்லத்துரை சொத்து கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை, அவரது தாய் செல்லத்தாயை தாக்கி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோச் அந்தோணி மைனர்ராஜ் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தார்.

மேலும் செய்திகள்