தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-17 20:34 GMT
மின்கம்பத்தால் போக்குவரத்து நெருக்கடி
ஆரல்வாய்மொழியில் நெடுமங்காடு செல்லும் சாலை  நான்குமுனை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரம் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த பகுதியில் இரு கனரக வாகனங்கள் எதிரே வரும்போது மின்கம்பத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
மின் கம்பம் மாற்றப்படுமா?
புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியபெருமாள்விளையில் உள்ள எப்.ஐ.12 மின்கம்பத்தின் கீழ் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் நிற்கிறது. தற்போது, அந்த மின் கம்பத்தில் சில நேரங்களில் மின்சாரம் பாய்கிறது. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும். 
                                  -சுரேஷ், அரியபெருமாள்விளை.
நோய் பரவும் அபாயம்
அழகியபாண்டியபுரம் பேரூராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு செய்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது, குடிநீர் சுத்திரிக்கப்படாமல் கலங்கிய நிலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                          -குமார், இறச்சகுளம்.
வீடுகளில் புகும் கழிவுநீர் 
நாகர்கோவில், கோட்டார் ராமர்காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருவில் தேங்கி நின்று வீடுகளுக்குள் புகுகிறது. இதனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, வீடுகளில் தண்ணீர் புகாதவாறு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
                                        -பாபு, ராமர் காலனி.
 வடிகால் ஓடை சீரமைக்கப்படுமா?
சீதப்பாலில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் காம்பவுண்டு அருகில் சாலையோரம் உள்ள வடிகால் ஓடை முறையாக பராமரிக்கப்படாததால் செடிகொடிகள் வளர்ந்து மூடப்பட்டுள்ளது. இதனால், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே,வடிகால் ஓடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                -மயில் கார்த்திகேயன், சீதப்பால். 
குளத்தை தூர்வார வேண்டும்
நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இலவுவிளையில் அன்றுவற்றி குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக  குளத்தை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்படுக்கு கொண்டு வரவேண்டும். 
                                         -சிவகுமார், இலவுவிளை.

மேலும் செய்திகள்