ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 250 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 97 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 90 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 1,701 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 91 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 906 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 679 ஆக உயர்ந்தது.