ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பு

ஈரோடு மாநகராட்சி வில்லரசம்பட்டி பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இங்கு ஈரோடு மாநகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஆகாயத்தாமரை வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்து உள்ளது.

Update: 2021-10-17 20:06 GMT
ஈரோடு மாநகராட்சி வில்லரசம்பட்டி பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இங்கு ஈரோடு மாநகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் இங்கு நடைபயிற்சி மேற்கொள்ளவும், படகு பயணம் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டன. ஆனால் இதற்கான பணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஆகாயத்தாமரை வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்து உள்ளது. எனவே குளத்தை தூய்மை செய்து, படகு இல்லம் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்