வியாபாரிகள் சங்க கூட்டம்
வீரவநல்லூரில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் வியாபாரிகள் சங்க கூட்டம், வியாபாரிகள் சங்க அலுவலக கட்டிடத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தலைவராக ரத்தினராஜ், துணைத் தலைவராக விநாயக வேல், செயலாளராக உலகநாதன், துணைச் செயலாளராக கிருஷ்ணன், பொருளாளராக அலியார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் 17 பேர் கொண்ட நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வீரவநல்லூர் வியாபார சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.