கலப்பட டீசல் விற்றவர் கைது

கலப்பட டீசல் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-17 19:02 GMT
கரூர், 
குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அதிகாரி உத்தரவுப்படி மதுரை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் கரூர் சுக்காலியூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டேங்கர் லாரிகளின் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த சுங்ககேட் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கலப்பட டீசலை குறைந்த விலைக்கு வாங்கி அங்கு நின்றிருந்த டேங்கர் லாரிகளின் உரிமையாளரான ராஜ்கண்ணன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கூறியதின் பேரில் டேங்கர் லாரிகளில் நிரப்பி அங்கு வரும் லோடு லாரிகளுக்கு டீசல் போட்டு கள்ளச்சந்தை மூலம் அதிக லாபம் பெறும் நோக்குடன் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, 2 டேங்கர் லாரிகளையும், டேங்கர் லாரியில் இருந்த 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலையும் கைப்பற்றிய போலீசார் ராஜாவையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்