பேரையூர்,
வில்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த பாண்டீஸ்வரன் (வயது 27), பழனி முருகன் (30), முருகன் (56), பாண்டி (47), கார்த்திக் (25), வெள்ளைசாமி (48) ஆகியோர் அங்குள்ள சமுதாயகூடத்தில் சூதாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து சென்ற போலீசார் சூதாடிய வர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1160-ஐ பறிமுதல் செய்தனர்.