ஆழியாறு அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆழியாறு அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2021-10-17 17:27 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எழில் மிகுந்த பகுதியில் ஆழியாறு அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. இந்த அணை மற்றும் பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி, சனி, ஞாயிற்றுக்கிழமை என 4 நாட்கள் பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறையின் காரணமாக சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

இதேபோல பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அணை பகுதி மற்றும் பூங்காவின் அழகை கண்டு ரசித்தனர்.  

மேலும் சுற்றுலா பயணிகள் தங்களின் செல்போன்களில் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.  அணை பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், ஆழியாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்