செஞ்சி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் நண்பர்கள் 3 பேர் கைது

செஞ்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-10-17 17:03 GMT
செஞ்சி, 

செஞ்சி பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் செஞ்சியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று  சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது தென்பாலை கிராமத்தை சேர்ந்த  அண்ணாதுரை மகன் யோகராஜ் (வயது 24) என்பவர் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை மிரட்டி, கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். 

அவரை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு தென்பாலையை சேர்ந்த ஆசைத்தம்பி மகன்  ஆனந்த்பாபு (23) என்பவரும் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.


இதன் பின்னர் யோகராஜ், ஆனந்தபாபு ஆகியோரின் நண்பரான பாண்டியன்(29) என்பவரும் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு அவர் மறுத்து தப்ப முயன்ற போது, அவரை திட்டி தாக்கி, பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார்செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகராஜ், ஆனந்தபாபு, பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்