ரிஷிவந்தியம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ரிஷிவந்தியம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-10-17 17:03 GMT


ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள பகண்டை கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவர் அனுமந்தன் மகன் ராமச்சந்திரன்(வயது 26) தொழிலாளி . இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அரியோணம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரம்யா என்பவரை ராமச்சந்திரன் 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினர் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவரது மைத்துனர் சின்னதுரை அங்கு வந்தபோது ராமச்சந்திரன் வீ்ட்டின் அறையில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பகண்டை கூட்டுரோடு போலீசார் ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்