போச்சம்பள்ளி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
போச்சம்பள்ளி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் காயம் அடைந்தனர்.
மத்தூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கல் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 16 பேர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வேனில் சுற்றுலா வந்தனர். அவர்கள் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை கூற்றி பார்த்த பின்னர் மீண்டும் திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டி மாவத்தூர் பிரிவு சாலை அருகே சென்றபோது வாத்து கூட்டத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென வண்டியை நிறுத்த முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த வினிதா (வயது 20), அமலா (35), தமிழ்பாரதி (25) அமுதா (40) உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.