மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-10-17 16:28 GMT
மதுரை, 
மதுரை தல்லாகுளம் பி.டி. நகரை சேர்ந்தவர் தனசேகர் (வயது40). இவர் வீட்டின் முதல் மாடியில் நின்றபடி செல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித் தனர். இதுகுறித்து அவரது மனைவி அனிதா அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்