முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அமைச்சர் நமச்சிவாயம் நள்ளிரவில் திடீர் ஆய்வு

முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அமைச்சர் நமச்சிவாயம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-10-17 16:21 GMT
புதுச்சேரி, அக்.
புதுச்சேரி உள்துறை  அமைச்சர் நமச்சிவாயம்  நேற்று முன் தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும், அது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அங்கிருந்த  போலீசாரிடம் கூறினார். இதன்பின் நமச்சிவாயம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகள்