புதுச்சேரியில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மாகியில் ஒருவர் உயிரிழந்தார்.
புதுச்சேரியில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மாகியில் ஒருவர் உயிரிழந்தார்.;
புதுச்சேரி, அக்.
புதுச்சேரியில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மாகியில் ஒருவர் உயிரிழந்தார்.
பரிசோதனை
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 52 பேருக்கு தொற்று உறுதியானது.
இதில் புதுவையில் 35, காரைக்காலில் 9, ஏனாமில் 1, மாகியில் 7 பேர் ஆவார்கள். புதுச்சேரியில் இதுவரை 18 லட்சத்து 68 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 396 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தற்போது 99 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 486 பேர் வீடுகளிலும் என மொத்தம் 585 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 64 பேர் குணமடைந்தனர்.
தடுப்பூசி
மாகி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த மாகியை சேர்ந்த 59 வயது முதியவர் பலியானார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,850 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பாதிப்பு 1.26 சதவீதமாகவும், குணமடைவது 98.09 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 1,124 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4 ஆயிரத்து 155 பேரும் போட்டுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 75 ஆயிரத்து 96 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளர் அருண் தெரிவித்துள்ளார்.