முறப்பநாடு பகுதியில் மது விற்ற 2பேர் கைது
முறப்பநாடு பகுதியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
ஸ்ரீவைகுண்டம்:
முறப்பநாடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வல்லநாடு பெருமாள் கோவில் பகுதியில் மாரிமுத்து மகன் மாடசாமி (வயது 26) மது விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து 32மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று திருவேங்கடபுரத்திலிருந்து சீத்தார்குளம் செல்லும் சாலையில் மது விற்றுக் கொண்டிருந்த சிவகளையைசேர்ந்த பேச்சிமுத்து மகன் நம்பி (41) என்பவரிடம் இருந்து 100 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முறப்பநாடு ேபாலீசார் வழக்குப்பதிரு செய்து அந்த 2 பேரையும் கைது ெசய்தனர்.