கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் பலி
கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் பலி
சின்னசேலம்
சின்னசேலம் அருகே உள்ள நமச்சிவாயம் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்தமிழன். இவருடைய மனைவி வெண்ணிலா(வயது 28). இவர்களுக்கு சுபிக்க்ஷா ஸ்ரீ(3), ரித்யஸ்ரீ(10 மாதங்கள்) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3-வதாக கர்ப்பம் அடைந்த வெண்ணிலா கருகலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி வெண்ணிலா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில்சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.