வேலூர் மாநகராட்சியில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது;

Update: 2021-10-17 15:55 GMT
வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த பரிசு திட்டமும் அறிவிக்கப்பட்டது. மக்களும் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநகராட்சி பகுதியில் இதுவரை சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடாமல் உள்ளார்களா? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

 மாநகராட்சியில் தற்போது சுமார் 17 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதலாக தடுப்பூசி வரவழைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்