திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாள் வாகன சோதனையில் 2,477 வழக்குகள் பதிவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடத்திய வாகன சோதனையில் 2,477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ,2½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடத்திய வாகன சோதனையில் 2,477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ,2½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2,477 வழக்குகள் பதிவு
திருப்பத்துர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 மற்றும் 16-ந் தேதியில் மாலை நேரங்களில் 24 முக்கிய பகுதிகளில் வாகன விபத்துக்களை குறைக்கவும், பொது மக்களுக்கு தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதின் முக்கியத்துவத்தை அறியும் பொருட்டு வாகன சோதனை மேற்ெகாள்ளப்பட்டது.
இந்த வாகன சோதனையில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 165 பேர் மீதும், சரக்கு வாகனங்களில் பயணித்த 105 பேர், அதிக பாரம் ஏற்றிய 13 வாகனங்கள், விதிகளை மீறியதாக 631 வாகனங்கள் மீதும், அதிக வேகத்தில் இயங்கிய 34 வாகனங்கள், தலைக்கவசம் அணியாமல் பயணித்த 1,182 பேர், சீட்பெல்ட் அணியாமல் பயணித்த 347 பேர் என மொத்தம் 2,477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
ரூ.2½ லட்சம் அபராதம்
மேலும் ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 90 அபராதம் விதிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் விதிகளை பின்பற்றி தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டும்படி அறிவுறைகள் வழங்கப்பட்டது. சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலோ, 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக காவல் உதவி எண் 9442992526-க்கோ புகார் தெரிவிக்கலாம். அதன்மீது உடனடியாக சட்டப்படி நடவழக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.