குடிநீர் வினியோகத்தை தடைசெய்பவர்கள் மீது பொதுமக்கள் போலீசில் புகார்
குடிநீர் வினியோகத்தை தடைசெய்பவர்கள் மீது பொதுமக்கள் போலீசில் புகார்;
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அருகே ஏரியை ஆக்கிரமித்து குடிநீர் வினியோகத்துக்கு தடை செய்பவர்கள் மீது பொதுமக்கள் சார்பில் கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
மேல்மாயில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மயிலாடுமலை அருகே உள்ளது மாங்குப்பம் ஏரி. இதில் பஞ்சாயத்து சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, பைப்லைன் மூலம் மயிலாடுமலை, செங்குலவிபட்டி, காங்குத்தான்பட்டி, ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்குக் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. சிலர் இந்த ஏரியை ஆக்கிரமித்து அதில் அமைக்கப்பட்டுள்ள பைப் லைன்கள், மின்சார இணைப்புகள், மோட்டார்கள் ஆகியவற்றை உடைத்து வீசி, தீ வைத்து குடிநீர் வினியோகத்தைத் தொடர்ந்து தடை செய்து வருகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கிராமங்களுக்கு முறையாக, தடையற்ற குடிநீர் வழங்க உதவுமாறு ஊர் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.