கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 21ம் தேதி தொடங்குகிறது
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 21ம் தேதி தொடங்குகிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி யம்மன் உடனுறை பூவனநாதர் சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 21ஆம் தேதி(வியாழக்கிழமை) தொடங்கி நவம்பர் 1-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
திருவிழாவையொட்டி கோவில் முன்பு பந்தல்கால் நட்டும் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரி நாகராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது. சாமிநாத பட்டர் செண்பகராமன் சிறப்பு வழிபாடுகள் நடத்தி 7 மணி அளவில் பந்தல் காலை நட்டினார்கள். இதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் மண்டகப்படி தாரர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். விழா நாட்களில் இரவு 7 மணிக்கு அம்பாள் சுவாமி பல்லக்கில் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவம்பர் 1-ஆம் தேதி கோவில் உள் அரங்கில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.