காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு - செவிலிமேடு தரைப்பாலத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை

காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் செவிலிமேடு தரைப்பாலத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2021-10-17 00:22 GMT
காஞ்சீபுரம்,

தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எல்லை பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்ளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் பொன்னையாற்றின் வழியாக பாலாற்றில் கலந்து வருகிறது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை தொடர்ந்து தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்திலும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்றில் கடந்த ஓரு ஆண்டுக்கு பிறகு கணிசமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்றின் தரைபாலம் வழியாக செல்லாமல் இருக்க தரைபாலத்தின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி முழுவதுமாக அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஓரு ஆண்டுக்கு பிறகு காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் செல்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றும், செல்போனில் படம் பிடித்தும் செல்கின்றனர்.

மேலும் செய்திகள்