10-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம்-வாலிபர் கைது

10-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-16 22:11 GMT
வாழப்பாடி:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் பெரியசாமி (வயது 22). இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்