ஈரோட்டில் பெட்ரோல் -டீசல் தொடர்ந்து விலை உயர்வு

ஈரோட்டில் பெட்ரோல் -டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Update: 2021-10-16 20:51 GMT
ஈரோடு
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 88 காசுக்கு விற்பனையானது. நேற்று மேலும் 26 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 14 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதைப்போல் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் 98 ரூபாய் 76 காசுக்கு விற்பனையானது. நேற்று மேலும் 30 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 99 ரூபாய் 6 காசுக்கு விற்பனை ஆனது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்