ஆடு மேய்க்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

ஆடு மேய்க்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனார்.

Update: 2021-10-16 19:21 GMT
பெரம்பலூர்
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூரை சேர்ந்தவர் முருகேசன் மகன் மகாதேவன்(வயது 19). இவர் பெரியவடகரையில் தங்கி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த மகாதேவன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாதேவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்