ராமேசுவரத்தில் இருந்து அயோத்திக்கு நடைபயணமாக புறப்பட்ட ராணுவ வீரர்
கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி ராமேசுவரத்தில் இருந்து அயோத்திக்கு ராணுவ வீரர் நடைபயணம் புறப்பட்டார்.;
ராமேசுவரம்,
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 33). அசாமில் உள்ள ராணுவ முகாமில் பணிபுரிந்து வரும் இவர் ராமேசுவரத்தில் இருந்து அயோத்திக்கு நேற்று 197 நாடுகளை சேர்ந்த கொடிகளுடன் நடைபயணமாக விழிப்புணர்வு பிரசாரமாக புறப்பட்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்தும், மனித வளங்களை காக்க அனைத்து நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், மற்றும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தியும் 197 நாடுகளின் கொடியுடன் விழிப்புணர்வு பிரசாரமாக நடைபயணமாக ராமேசுவரத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டு உள்ளேன். அயோத்தியில் எனது இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை முடிக்க உள்ளேன். ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணமாக பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார்.