சாலையில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு

கல்லல் அருகே சாலையில் வீசப்பட்ட பெண் குழந்ைத மீட்கப்பட்டது.

Update: 2021-10-16 18:56 GMT
கல்லல், 

கல்லல் அருகே சாலையில் வீசப்பட்ட பெண் குழந்ைத மீட்கப்பட்டது.

சாலையில் கிடந்த பெண் குழந்தை

கல்லலை அடுத்துள்ள நாகவயலில் இருந்து கூத்தலூர் செல்லும் சாலையில் ஒரு பாலம் அருகே பிறந்து மூன்று மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை நேற்று அழுதபடி கிடந்தது. அந்த வழியே சென்ற பாடத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யநாதன் என்பவர் பச்சிளம்குழந்தை கிடப்பதை கண்டு அந்த குழந்தையை மீட்டு எஸ்.ஆர். பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். 
அந்த குழந்தை சிறு காயங்களுடன் காணப்பட்டதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

சிகிச்சை
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் அந்த குழந்தையை தாய் சேய் சிகிச்சை பிரிவில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இங்குபேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் .மேலும், அந்த குழந்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அவர் நேரில் வந்து பார்வையிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கல்லல் போலீசார் வழக்கு பதிவு செய்து. குழந்தையை விட்டு சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்