தோண்டி வீசப்பட்ட பனைமரம் அதே இடத்தில் நட கலெக்டர் உத்தரவு

வாணியம்பாடியை அடுத்த தும்பேரி அருகில் உள்ள நாயுடுவட்டம் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் அமைப்பதற்காக கேபிள் வயர் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.;

Update: 2021-10-16 18:49 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த தும்பேரி அருகில் உள்ள நாயுடுவட்டம் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் அமைப்பதற்காக கேபிள் வயர் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் செட்டிக்குட்டை பகுதியில் ஒரு பனைமரத்தை  அனுமதி இல்லாமல் அடியோடு பிடுங்கி போட்டுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் கேட்டதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அனுமதி கொடுத்து தான் நாங்கள் அகற்றினோம் என்று வேலையாட்கள் கூறினர்.

பனை மரத்தை வெட்ட தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட மரம் பனைமரம் என்று சட்டம் இயற்றி உள்ளது. எனவே உயர் அதிகாரிகள் இதனை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு, வாணியம்பாடி டாக்டர். ஏ.பி.ஜே.பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் புகார் அளிக்கப்பட்டது, 

அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் கலெக்டர் உடனடியாக மீண்டும் அதே இடத்தில் தோண்டப்பட்ட பனைமரத்தை மீண்டும் நட செல்போன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக 2 பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மீண்டும் அதே இடத்தில் பனைமரம் தூக்கி நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்